நம் அனைவருக்கும் தெரிந்த இந்தியாவின் மிக சிறந்த தமிழ் நாளிதழ் "தினமலர்" . அது மிகச்சிறந்த தமிழ் நாளிதலாய் இருபதனால் தான் நான் இங்கு இதை கூறுகிறேன், சமீப காலமாக தினமலர் நாளிதழில் ஆங்கிலம் கலந்த தமிழில் அச்சிடபடுகிறது.
இதோ இங்கு பாருங்கள்.
சுப்ரீம் கோர்ட் என்பதனை “உச்ச நீதிமன்றம்” எனலாம்
டாக்டரை “மருத்துவர்” எனலாம்
ஆஸ்பத்திரி என்பதனை “மருத்துவமனை” எனலாம்
இது போல் இன்னும் இருக்கின்றது
நாம் இணையத்தில் ஆங்கிலம் கலந்த தமிழில் என்ன வேண்டும் என்றாலும் விவரிக்கலாம் அனால் இந்தியாவில் ஒரு மிக சிறந்த தமிழ் நாளிதழ் இவ்வாறு ஆங்கிலம் கலந்த தமிழை வழங்குவது மிகவும் வேதனையாக உள்ளது.
நான் இங்கு காட்டியுள்ளது (27 மார்ச் 2009) அன்று வெளிவந்த தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பின் படங்களே,
இப்படிக்கு : தினமலரை தினமும் படிக்கும் தமிழக இந்தியன்
தினமலர் நாளிதழ் ஆசிரியர்கள் இதை பார்த்தல் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆங்கிலம் மோகத்தால் மெல்ல மெல்ல மடிந்துகொண்டு இருக்கும் தமிழை பிழை இன்றி காப்பற்றுங்கள். ஏன் என்றால் உங்கள் நாளிதழை இந்தியாவே படிகின்றது.
படங்கள்: தினமலர் இணையதளம்